தமிழ் (Tamil)

ஒரு வரைபடமும், மற்றும் கட்டணங்கள், வாடகை மோட்டார் வண்டிகள் (டாக்ஸி), நெரிசல் கட்டணம், பார்க்லேஸ் மிதிவண்டி வாடகை நிலையம், மற்றும் நதியில் படகுச்சவாரி சேவைகள் பற்றிய மற்ற தகவல்களும் இந்த பக்கத்தில் அடங்கும்.  

லண்டன் சுரங்கப்பாதை வரைபடம்

லண்டன் சுரங்கப்பாதை(அண்டர்கிரவுண்ட்), லண்டன் நில மட்டம் (ஓவர்கிரவுண்ட்) மற்றும் டாக்லாண்ட்ஸ் லைட் ரயில்வே (DLR) ஆகியவற்றிற்கு குறுக்கே அமைந்துள்ள ட்யூப் ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பிணைப்புகளை பற்றிய தகவல்களை இந்த வரைபடம் கொண்டுள்ளது.

கொன்டொக்டநலெஸ்

கான்டாக்ட்லெஸ் லண்டன் பயணம் விரைவானது, சுலபமானது மற்றும் பாதுகாப்பானது. பேருந்து, டியூப், டிராம், DLR, London Overground மற்றும் லண்டனில் உள்ள பெரும்பாலான National Rail சேவைகள் ஆகியவற்றில் நீங்கள் உங்களுடைய கான்டாக்ட்லெஸ் கொடுப்பனவு அட்டையை நீங்கள் பயன்படுத்த முடியும். 

ஆயிஸ்டர் கட்டணங்கள் மற்றும் பயணச்சீட்டு

நீங்கள் லண்டனை சுற்றி பயணம் செய்கிறீகள் என்றால், ஒரு ஆயிஸ்டர் அட்டை பெறுவதே உங்கள் பயணங்களுக்கு பணம் செலுத்த மலிவான வழிகளில் ஒன்றாகும். ஒருமுறை நீங்கள் ஒரு ஆயிஸ்டர் அட்டையை வாங்கிவிட்டீர்கள் என்றால், சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் உட்பட லண்டனை சுற்றி அமைந்திருக்கும் பல்வேறு இடங்களில், அதன் கட்டணத்தை அதிகரித்துக்கொள்ள (டாப் அப்) முடியும். இந்த நிலையங்கள் பலவற்றில், ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பனீஸ், அரபு, பெங்காலி, சீன, கிரேக்க, குஜராத்தி, ஹிந்தி, போலிஷ், பஞ்சாபி, தமிழ், துருக்கி மற்றும் உருது மொழிகளில் உங்களுடைய அட்டையின் கட்டணத்தை அதிகரிக்கும் விருப்பத்தேர்வினை வழங்கக்கூடிய தொடுதிரை டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன.

பார்க்லேஸ் மிதிவண்டி வாடகை நிலையம்

நூற்றுக்கணக்கான நிலையங்களில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான பைக்குகள் கிடைப்பதால் பார்க்லேஸ் சைக்கிள் வாடகை நிலையம் பயணம் செய்ய ஒரு எளிய மற்றும் குதூகலமான வழியாகும். லண்டனில் ஒரு பைக்கை வாடகைக்கு எடுப்பது பற்றி மேலும் அறியவும்.

நெரிசல் கட்டணம்

திங்கள் முதல் வெள்ளி வரை 07:00 மணி மற்றும் 18:00 மணிக்கு இடையே மத்திய லண்டனுக்குள் நீங்கள் நுழைந்தால், தினசரி நெரிசல் கட்டணமாக நீங்கள் £11.50 செலுத்த வேண்டி இருக்கலாம். இது எவ்வாறு செயல்படுகிறது, கட்டணம் செலுத்துதல் மற்றும் விதிவிலக்குகள் பற்றிய தகவல்களை இந்த ஆவணம் உள்ளடக்குகிறது.

குறைந்த உமிழ்வு (எமிஷன்) மண்டலம் (LEZ)

நீங்கள் ஒரு பெரிய வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்றல், LEZ-ற்கான தேவைப்படும் மாசு தரங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். LEZ கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பொருந்தாது. LEZ பற்றி மேலும் அறியவும்.

முழு விவரங்களை ஆங்கிலத்தில் படிக்கவும்

நதியில் செல்லும் படகு (ரிவர் போட்)

தேம்ஸ் நதி படகு சேவைகள் வழிகாட்டியின் நகல் ஒன்றை உங்கள் மொழியில் பெற, தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:

K International plc.
14 Davy Avenue
Knowlhill
Milton Keynes MK5 8PL
United Kingdom

தொலைபேசி: +44 (0)800 298 3009

Close Favourites

My Lines

My Buses

My Roads

My River Buses

My Emirates Air Line

My Journeys

My Places

  Close edit Favourites

  Favourite lines

  Favourite buses

  Favourite roads

  Favourite river buses

  Favourite Emirates Air Line

  Favourite journeys

  Favourite places